Tuesday, January 8, 2008

இன்னும் பிறக்காத தலைமுறைக்காக‌



சு.தியடோர் பா‍‍ஸ்கரனின் இந்நூல் நமது சுற்றுச்சூழல் மற்றும் காட்டுயிர் பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைகள் பற்றிய அபூர்வமான தகவல்களை சுயமான பார்வையுடன் முன்வைக்கிறது. இயற்கைக்கெதிரான மனிதர்களின் குற்றங்கள் குறித்த கடுமையான கேள்விகளை எழுப்புகிறது.

வனஉயிர்கள், தாவரங்களின் அழிவு தொடர்பாக தியடோர் பாஸ்கரன் முன்வைக்கும் எச்சரிக்கைகள் இயற்கையின் மீதான பேரன்பிலிருந்தும் இயற்கையின் நீதி, அறம் குறித்த தார்மீகக் கேள்விகளிலிருந்தும் பிறக்கின்றன. சுற்றுச்சூழல் பிரச்சினைகள் தொடர்பாக தமிழில் எழுதப்பட்ட அரிய ஆவணம் இது.
இப்புத்தகம் குறித்தான எழுத்தாளர் பாவண்ணனின் விமர்சனம் திண்ணையில்.

2 comments:

லக்கிலுக் said...

புத்தகக் கண்காட்சியில் உயிர்மைக்கான அரங்கில் நுழையமுடியாத அளவுக்கு கூட்டத்தை கண்டேன். விற்பனையில் சாதனை புரிய வாழ்த்துக்கள்!

வீரமணி said...

வலை உலகுக்கு வருகை தந்திருக்கும் உயிர்மைக்கு வாழ்த்துக்கள்.

உயிர்மை பதிப்புகள் அனைத்தும் தமிழ் இலக்கிய உலகத்திற்கு மிக மிக முக்கியமானது.

அன்புடன்
வீரமணி

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது